Subscribe Us

மாமனார் மண்வெட்டியால் அடித்ததில் மருமகன் உயிரிழப்பு மாமனார் மண்வெட்டியால் அடித்ததில் மருமகன் உயிரிழப்பு

  கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமன... thumbnail 1 summary

 

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-


No comments

Post a Comment